தமிழக வரலாற்றில் புதிய உச்சம் : டீசல் விலை ரூ.100 ஐ தாண்டியது

Must read

டலூர்

மிழகத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் டீசல் விலை ரூ.100.29க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது.   மேலும் இதனுடன் உள்ளூர் வரிகளும் இணைக்கப்பட்டு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.10 ஆகவும் டிசல் விலை லிட்டருக்கு ரூ.97.93 ஆகவும் உள்ளது.   ஆனால் உள் தமிழகத்தில் இந்த விலை மேலும் அதிகரித்துள்ளது.   இதில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் டீசல் விலை வரலாறு காணாத உச்சம் அடைந்துள்ளது.

இன்று வரலாற்றில் முதல் முறையாகத் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் டீசல் லிட்டருக்கு ரூ.100.29 என விற்கப்படுகிறது.   இவ்வாறு தொடர்ந்து உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More articles

Latest article