மேட்டுப்பாளையம்

தகை மலை ரயில் சேவை 4 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.

மேட்டுப்பாளையம் முதல் உதகமண்டலம் வரை செல்லும் மலைரயிலில் பயணம் செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்த மலை ரயில் குகைகளுக்குள் புகுந்து பல இயற்கைக் காட்சிகளுடன் செல்கின்றது.

நீலகிரி மலையில் கடும் மழை பெய்தது.  இதனால் இந்த ரயில் செல்லும் பாதையில் கல்லாறு மற்றும் அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே 4 நாட்களுக்கு முன் கடும் மண் சரிவு ஏற்பட்டது.  இதையொட்டி கடந்த 4 நாட்களாக உதகை மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது அந்தப் பகுதி சீராகி ரயில் பாதை சரி செய்யப்பட்டுள்ளது.  இதையொட்டி உதகை மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.  இன்று காலை 7.10 மணிக்கு 180 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் புறப்பட்டுச் சென்றுள்ளது.