சென்னை:  தலைநகர் சென்னையில் மழை நின்றதால் அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு நிறுத்தப்பட்டது. இலவச உணவை நோக்கி அம்மா உணவகம் சென்றவர்கள் ஏமாற்ற மடைந்தனர். காசு கொடுத்தால்தான் உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் பெய்து வந்த கனமழை காரணமாக, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஒரு வாரம் அம்மா உணவகத்தில் ஏழைகளுக்கு 3 வேளையும் மழைக்காலம் முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த வாரம்  மக்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்பட்டு வந்தது.

தற்போது, கடந்த இரு நாட்களாக சென்னையில் மழை பாதிப்பு குறைந்துள்ளதால், பழைய முறைப்படி  அம்மா உணவகங்களில் இன்று முதல் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அறியாத பலர், இன்று காலையே அம்மா உணவகத்திற்கு சென்ற நிலையில், அங்கு காசு கேட்கப்பட்டதும் அதிர்ச்சி அடைந்து வாக்குவாதம் செய்தனர். அவர்களுக்கு அரசின் உத்தரவை விளக்கியதைத் தொடர்ந்து பணம் கொடுத்து உணவு அருந்தினர்.