டில்லி:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுக்களை கூறிய 4 நீதிபதிகளும் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கு 7 முக்கிய வழக்குகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசன் ஆகியோர் கடந்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி பேட்டி அளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் ஆதார் தொடர்பான வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் சிக்ரி, கான்வில்கார், சந்திரசுத், அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமை க்கப்பட்டது. இதே அமர்வு தான் அடுத்து 7 முக்கிய வழக்குகளை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 வழக்குகளின் விபரம்…

1. ஓரினச் சேர்க்கை வழக்கு.

2. சபரிமலைக்கு கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு.

3. வேறு சமூகத்தில் திருமணம் செய்த பார்சி இன பெண்கள் தீ கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதை எதிர்க்கும் வழக்கு.

4. விபச்சார வழக்கில் ஆண்களையும் குற்றவாளியாக சேர்ப்பது தொடர்பான வழக்கு.

5. கிரிமினல் வழக்கு உள்ள அரசியல் வாதிகள் தேர்தலில் போட்டியிட தகுதியிழப்பு செய்வது தொடர்பான வழக்கு,

6. வரி விதிப்பு வழக்கு.

7. நுகர்வோர் சட்ட வழக்கு.

ஏற்கனவே வழக்குகள் ஓதுக்கீடு செய்வதில் மூத்த நீதிபதிகளை கலந்து ஆலோசிப்பதில்லை என்று தலைமை நீதிபதி மீது மூத்த நீதிபதிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில் அரசியல்சாசன அமர்வுக்கு அவர்கள் 4 பேரையும் புறக்கணித்திருப்பது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு மும்பை சிபிஐ நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கும் நீதிபதிகள் நியமனம் செய்வதிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று நீதிபதிகள் புகார் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.