டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் உடல்நலம் பாதிப்பு காரணமாக குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களாக அவர் மயக்கமடைந்த நிலையிலேயே  குருகிராம் போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு  காலமானார். அவருக்கு வயது 75.  இதை அவரது மகள் சுபாஷினி யாதவ் அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சரத்யாதவ் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோதே, அவர் மயக்க நிலையில் இருந்ததாகவும், நாடித்துடிப்பு வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில், ‘  சிபிஆர் போன்ற சிகிச்சைக்கு பின்னரும் அவரை காப்பாற்ற முடியவில்லை என

தெரிவித்துள்ளது.

சரத் யாதவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அஞ்சலி தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “சரத் யாதவின் மறைவு வேதனை தருகிறது. தனது நீண்ட பொது வாழ்வில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார். டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். சரத் யாதவுடன் நான் பழகிய தருணங்கள் என்றும் நினைவில் இருக்கும். குடும்பத்தாருக்கும் அனுதாபிகளுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் சரத் பவார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த சரத் யாதவ் எமர்ஜென்சி காலத்தில் ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கத்தின் தாக்கத்தால் பொது வாழ்வுக்கு வந்தவர். இவர் ஏழு முறை மக்களவை உறுப்பினராகவும், மூன்று முறை மாநிலங்களை உறுப்பினராகவும் தேர்வானவர்.அன்றைய ஜனதாதள கட்சியின் முன்னணி தலைவராக இருந்த சரத் யாதவ், 1989ஆம் ஆண்டு முதல் முறையாக அமைச்சரானார்.

பின்னர் ஜார்ஜ் பெர்னாட்ஸ், நிதீஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து ஐக்கிய ஜனதாளதம் கட்சியை 2003ஆம் ஆண்டில் நிறுவினார். அக்கட்சியின் முதல் தேசிய தலைவராகவும் இருந்தார். 2018ஆம் ஆண்டில் நிதீஷ் குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஐக்கிய ஜனதாளதம் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். சரத் யாதவிற்கு 1989இல் திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மகள் சுபாஷினி ராவ் அரசியலில் உள்ளார்.