கர்தலா

திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மானிக் சர்கார் தனது முதல்வர் இல்லத்தை காலி செய்து விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு குடி பெயர உள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் தொடர்ந்து 25 வருடங்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வந்தது.   அக்கட்சியின் மாணிக் சர்கார் கடந்த 20 வருடங்களாக திரிபுரா முதல்வராக பதவி வகித்து வருகிறார்.    அவருக்கு அரசு சார்பில் வசிக்க ஒரு இல்லம் தரப்பட்டிருந்தது.    அங்கு அவர் வசித்து வந்தார்.

தற்போது பாஜக அரசு ஆட்சி அமைத்த பின் தனக்கு அரசு அளித்துள்ள இல்லத்தை மானிக் சர்கார் காலி செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திலேயே வசிக்க திட்டமிட்டுள்ளார்.   அதை ஒட்டி ஏற்கனவே  சில புத்தகங்கள், உடைகள் மற்றும் சில சிடிக்களை அலுவலகத்துக்கு அனுப்பி விட்டார்.    இன்று அவர் முழுவதுமாக வீட்டை காலி செய்து அலுவலகத்தில் குடியேற உள்ளார்.

ஏற்கனவே சர்காரின் மனைவி தங்களிடம் உள்ள மார்க்சிஸ்ட் சம்பந்தப்பட்ட புத்தகங்களை கட்சி அலுவலகத்தில் உள்ள நூலகத்துக்கும், பிசேந்திரா மத்திய நூலகத்துக்கும் அன்பளிப்பாக வழங்க உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.