முன்னாள் தலைமைநீதிபதி ரஞ்சன்கோகோய், மற்றும் தமிழக எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற குழுக்களில் பதவி…

Must read

சென்னை:
ச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன்கோகோய்  மற்றும் அதிமுக எம்.பி. தம்பிதுரை, திருச்சி சிவா உள்பட தமிழக எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற குழுக்களில் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  வெளியுறவுத்துறை அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அதிமுகவின் தம்பிதுரை மற்றும் த.மா கா. தலைவர் ஜிகே வாசன் மனிதவள மேம்பாட்டு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

கே.பி. முனுசாமி, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளர்.
திமுக எம்.பி.யான திருச்சி சிவா, போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக  நியமிக்கப்பட்டு உள்ளார்.
மற்றொரு திமுக எம்.பி.யான என்.ஆர் இளங்கோ எம்.பி,.  நீர்வளத்துறை அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
 

More articles

Latest article