சாத்தான்குளம் சம்பவம்: சிறையில் உள்ள சிறப்பு காவல்ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா…

Must read

மதுரை: 
சாத்தான்குளம்  தந்தை மகன் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சிறப்பு காவல்ஆய்வாளர்  பால்துரைக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ், காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த வழக்கை முதலில் விசாரித்த சிபிசிஐடி, 10க்கும் மேற்பட்ட காவல்துறையினரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தற்போது, வழக்கை விசாரித்து வருகின்ற சிபிஐ விசாரித்து வருகிறது. சிறையில் அடைக்கப்பட் டுள்ள காவலர்களை, சிபிஐ காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர் பால்துரை உள்பட மேலும்2 சிபிஐ அதிகாரிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள்  மதுரைஇரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறையில் உள்ள சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரைக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

More articles

Latest article