***அ.தி.மு.க.ஆட்சியின் போது, ஒன்றிய அரசின் தலைவர் நரேந்திர மோடியை அதிகம் துதிபாடியவர் அன்றைய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான்!

தனது ‘ஆவேச’ப் பேச்சுகள் மூலமாக பரபரப்பாகப் பேசப்பட்டவர்! தவிர, தி. மு. க. வையும்… அதன் தலைவர் ஸ்டாலினையும் மிகக் கடுமையாக விமர்சித்தவர்!

தனது கட்சியை விட, ஒன்றிய பா. ஜ. க ஆட்சிக்கு மிகவும் விசுவாசத்தைக் காட்டியவர்!

“” மோடி என் டாடி… “” என்று பொது வெளிகளில் பகிரங்கமாகப் புகழ்ந்தவர் இவர்!

ஆனால் , இவர் தனது துறையில் ஊழல்கள் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன!

இச்சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இவரும் தோற்றுப் போன நிலையில், ‘ கப் சிப் ‘ பான இவர், வழக்குகளுக்கு அஞ்சி, பல நாட்கள் டெல்லியில் தஞ்சம் புகுந்ததாகக் கூறப்படுகிறது!

ஆனால், தனது துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர் மீது வழக்குத் போடப்பட்டது! இதற்கான ஆதாரங்களை உயர்நீதி மன்றம் கேட்டறிந்தது!

உடனே ராஜேந்திர பாலாஜி தனக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தார்!

ஆனால், 16.12.21 அன்று உயர்நீதி மன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது!

இதனால் எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சும் ராஜேந்திர பாலாஜி தலை மறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது!

** ஓவியர் இரா. பாரி.