திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் காலமானார்…

Must read

வேலூர்: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் வயது முதிர்வு காரணமாக  காலமானார்.

திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவான கோவிந்தன் (வயது 80) வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மறைந்த கோவிந்தன் வேலூர் அருகே உள்ள  பேரணாம்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பணியாற்றிய வர். 1989 – 1990 மற்றும் 1996 – 2001 வரையிலான காலகட்டத்தில் பேரணாம்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்துள்ளார்

 

More articles

Latest article