சென்னை : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நீண்ட இடைவெளிக்குப் பின் நேற்று இரவு  தங்கத் தேரோட்டம் நடந்தது. தேரை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் இழுத்து நேர்த்தி கடனை செலுத்தினார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் அனைத்து கோவில்களிலும் மூடப்பகட்டது. அத்துடன் திருவிழாக்களும் நடத்த தடை விதிக்கப்பட்டது. கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், கோவில்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் முழுமையாக திருவிழாக்களுக்கு தடை விலக்கப்படவி6ல்லை.

இந்த நிலையில்,  அனைத்து கோவில்களிலும் தங்கத் தேர் பவனிக்கும் அந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் துவக்கமாக, 18 மாதங்களுக்கு பிறகு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு  தங்கத் தேரோட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு, தங்கத் தேரை இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தங்கத்தேரில் எழுந்தருளிய உற்சவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதற்கான கட்டணத்தை செலுத்தி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முன்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.