தீபாவளி பண்டிகைக்கு 50டன் ஆவின் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு! அமைச்சர் நாசர் தகவல்

Must read

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி 50டன் ஆவின் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே  கச்சூர் பகுதியில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் நாசர்,  57 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது, தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் நெய்யால் செய்யப்பட்ட இனிப்பு, கிலோ 425 ரூபாய்க்கு விற்கப்படும். கடந்த ஆட்சியில் தீபாவளி பண்டிகை அன்று ஆவினில் 18 டன் இனிப்பு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 50 டன் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

மேலும்,  “விரைவில் ஆவினில் ஆட்டு பால் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

More articles

Latest article