சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு கோடை விடுமுறைக்கு பின்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடோடிகள் படத்தில் நடித்த மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற நடிகையான சாந்தினி என்பவர் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்,  தன்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்’ என்று காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதுடன், மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்தகட்டமாக மணிகண்டனிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில், ஜாமீன் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மணிகண்டனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி நிபந்தையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில்,  தற்போது மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.