கோயம்புத்தூரில் முதன்முறையாக புற்றுநோயாளிகளுக்கென இலவச மருத்துவமனை திறந்தது ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை…

Must read

கோவை: தற்போதைய நவீன காலத்தில் புற்றுநோய் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், கோயம்புத்தூரில் முதன்முறையாக  புற்றுநோயாளி களுக்காக இலவச மருத்துவமனையை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் திறந்துள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நவீன வாழ்க்கை முறை, டிஜிட்டல் உலகம் உள்பட நாட்டில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்டு வரும்  மாசு, அலைக்கற்றையின் தாக்கம், உணவு முறைக ளில் மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், போன்றவையால் மனிதர்களுக்கு நோய்த்தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு பின்பற்ற வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்றவற்றில் மக்கள் கவனம் செலுத்துவதில் ஆர்வம் காட்டாததால், மக்களிடையே  புற்றுநோய் பாதிப்பு  அதிகரித்து வருகிறது.

புற்றுநோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில்  ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனம் உள்பட பல்வேறு சேவை நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருத்துவ நிபுண்ர்கள், மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அது தொடர்பான பல்வேறு வழிகாட்டல் நிகழ்ச்சிகளையும்  முன்னெடுத்து வருகின்றனர்.

தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் ஒரு லட்சம் ஆண்களில் 94 பேரும், ஒரு லட்சம் பெண்களில் 104 பேரும் ஏதாவது ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, 9 இந்தியர்களில் ஒருவருக்கு தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் பாதிக்க வாய்ப்புள்ளது என்றும் பயங்கரமான தகவலையும் தெரிவித்துள்ளது.

இந்த பரபரப்பான யுகத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை இலவச செய்ய கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை முன்வந்துள்ளது. இதற்காக, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையங்தை திறந்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து கோயம்புத்தூர் பேரூர் அருகே உள்ள பச்சபாளையத்தில் முதன்முதலாக நோயுற்ற புற்றுநோயாளிகளுக்காக கோவையின் முதல் இலவச நோய்த்தடுப்பு சிகிச்சை மைய மருத்துவமனை பிப்ரவரி 4 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

புற்றுநோய் ஆபத்தானது ஆனால் புற்றுநோயின் கட்டத்தைப் பொறுத்து இன்றைய நவீன சிகிச்சைகள் மூலம் அதை குணப்படுத்த முடியும். ஆயினும்கூட, சிகிச்சை முடிந்த பிறகும் தீவிர கவனிப்பு தேவைப்படும் நோய்களில் இதுவும் ஒன்றாகும். நோயின் நிலை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் அது நோயை குணப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எந்தவொரு நோய்க்கும் ஆரம்ப நிலையிலேயே  கண்டறிதல் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. 

பிப்ரவரி 4-ம் தேதியை உலக புற்றுநோய் தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கபடுகிறது, இது சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியத்தின் (UICC) உலகளாவிய ஒருங்கிணைப்பு முயற்சியாகும். மில்லியன் கணக்கான புற்றுநோய் இறப்புகள் தவிர்க்கப்படும் ஒரு உலகமாக  மறுவடிவமைக்க ஒன்றிணைந்து செயல்படுவதே இத்தகைய முயற்சியின் நோக்கமாகும், மேலும் அவர்கள் யாராக இருந்தாலும், எங்கு வாழ்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் உயிர்காக்கும் சிகிச்சையுடன் சிறந்த மருத்துவ சேவையை அளிப்பது எங்கள் கடமை. மேலும் இது உலகளாவிய மக்களிடம் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, கல்வி மற்றும் தனிப்பட்ட அல்லது  கூட்டு அரசாங்க நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்.

2022-2024 உலக புற்றுநோய் தினத்தின் கருப்பொருள் “புற்றுநோய் பராமரிப்பில் உள்ள குறைகளை களைவது”.. ஒவ்வொரு குடிமகனுக்கும் உலகில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் ஆற்றலும் திறனும் உள்ளது. புற்று நோயின் உலகளாவிய தாக்கத்தை குறைப்பதில் நீங்களும் ஒன்றாக இணைந்து பாரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். 

நோய்த்தடுப்பு சிகிச்சை என்பது புற்றுநோய் சிகிச்சையின் இன்றியமையாத தேவை ஆகும், இது நோயின் வேகத்தை குறைத்தல், நிறுத்துதல் அல்லது குணப்படுத்து தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பிற சிகிச்சைகளுடன் இணைந்து அளிக்கப்படுகிறது. நோய்த்தடுப்பு சிகிச்சையின் படி, உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம் மற்றும் உங்கள் சிகிச்சையில் நேர்மறையான விளைவை உணரலாம். ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட உடனேயே நோய்த்தடுப்பு சிகிச்சையை  தொடங்கலாம் கூடுதலாக, சிகிச்சை முடிந்த பிறகு தொடர்ச்சியான அல்லது புதிய அறிகுறிகள் அல்லது பக்கவிளைவுகளைக் கொண்ட புற்று நோயிலிருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கும்  நோய்த்தடுப்பு சிகிச்சை வழங்கப்படலாம்.

இதைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, புற்றுநோய்க்கு எதிரான  புதிய முயற்சியைக் கொண்டு, இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நோய்த்தடுப்பு சிகிச்சையை வழங்கிவருகிறது. பிப்ரவரி 4, 2022 அன்று, இந்த ஆண்டின் புற்றுநோய் கருப்பொருளை ஆதரிக்கும் வகையில், SNR சன்ஸ் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா ஹெல்த் சென்டரில் 20 படுக்கைகள் கொண்ட ஆதரவற்ற மக்களுக்கு இலவச நோய்த்தடுப்பு சிகிச்சையை வழங்குகிறது. கோவை பேரூர் அருகில் உள்ள பச்சாபாளையத்தில், புற்றுநோய் நோயாளிகள் நல்ல வாழ்க்கைத் தரத்திற்கு உதவும் வகையில் துவங்கப்பட்டுள்ளது..

இதன் துவக்க விழாவிற்கு எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார், எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சி.வி.ராம்குமார், ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் டீன் டாக்டர் பி.சுகுமாரன், SRIOR இன் இயக்குனர்  டாக்டர். P. குகன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.டாக்டர். K. கார்த்திகேஷ், SRIOR இன் தலைமை அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர், நன்றியுரை ஆற்றினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் குறிப்பிடத்தக்க பணிகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோயியல் துறை (https://www.sriramakrishnahospital.com/majordepartment/oncology-home/) தென் தமிழகத்தில் புற்றுநோய் துறையில் எப்போதும் முன்னோடியாக திகழ் கிறது  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இப்பகுதியில் முதன்முதலில் IGRT, கதிர்வீச்சு சிகிச்சைக்கான IMRT, போன்ற நவீன சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, குழந்தைகளுக்கு ஏற்படும்  புற்றுநோய்களுக்கு இலவச புற்றுநோய் பராமரிப்பு கூடத்தை  அமைத்து கோவை மண்டலத்தின் முன்னோடியாக காணப்படுகிறது.  இதன் மூலம்  1200 க்கும் மேற்பட்ட குழந்தைகளை குணப்படுத்த உதவியது. கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், வாய்ப் புற்று நோய்க்கான இலவச பரிசோதனை முகாம்களை ஆறு மாவட்டங்களில் தொடர்ந்து நடத்துவதில் இவர்கள் முன்னோடிகளாக உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக 6 மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.

SRIOR இன் இயக்குனர் டாக்டர். P. குகன் கூறுகையில், “நாங்கள் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய்க்காகவும், 1.3 லட்சத்துக்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வாய் புற்றுநோய்க்காகவும் முற்றிலும் இலவசமாகப் பரிசோதனை செய்துள்ளோம். நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்த ஒரு மருத்துவமனையும் ஆபத்தான நிலையில் உள்ள புற்றுநோயாளிகளை இலவச மருத்துவ உதவிக்கு எங்களிடம் அனுப்பலாம்.

பிப்ரவரி 4 ஆம் தேதி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் ஆதரவுடன், டாக்டர் தலைமையில் தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மையத்தை மக்களுக்கு வழங்கிவுள்ளது 

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பற்றி

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 1975 இல் தொடங்கப்பட்ட ஒரு புகழ் பெற்ற மருத்துவ நிறுவனம். கோயம்புத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை பல வழிகளிலும் சேவைகளாலும்  மருத்துவ வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. உண்மையில், இது நவீன இந்தியாவின் சுகாதாரப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எஸ்என்ஆர் சன்ஸ் தொண்டு நிறுவனத்தால் நிறுவப்பட்டு நடத்தப்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. உயிர்க்கொல்லி நோய் பாதிப்புகள்  முதல் அன்றாட வியாதிகளுக்கான சிகிச்சைகள் வரை, அதிநவீன தொழில்நுட்பம், அதிநவீன அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து தரப்பு நோயாளிகளுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கிவரும் மக்களுக்கான மருத்துவமனை ஆகும். 

https://www.youtube.com/c/SriRamakrishnaHospital

https://www.facebook.com/SriRamakrishnaHospital
https://www.instagram.com/ramakrishnahospital/

https://en.wikipedia.org/wiki/Sri_Ramakrishna_Hospital

More articles

Latest article