வாஷிங்டன்

வாஷிங்டன் தாக்குதலில் ஈடுபட்டதால் தமக்குச் சிறை தண்டனை கிடைக்கலாம் என அஞ்சி டெக்சாஸை சேர்ந்த ஒரு  பெண் மன்னிப்பு கோரியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்ததையொட்டி நடந்த வாஷிங்டன் முற்றுகையில் நாடாளுமன்ற கட்டிடம் தாக்கப்பட்டு ஒரு பெண் உள்பட 5 பேர் உயிர் இழந்தனர்.  இந்த கலவரத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  டிரம்ப் ஆதரவாளர்கள் நாடெங்கிலும் இருந்து வாஷிங்டனுக்கு வந்து இந்த கலவரத்தை நடத்தி உள்ளனர்.

அவர்களில் ஒருவரான டெக்சாஸை சேர்ந்த ஜென்னா ரயான் என்னும் ஒரு பெண் ரியல் எஸ்டேட் தரகராகப் பணி புரிந்து வருகிறார்.  அவர் தனி விமானத்தின் மூலம் வாஷிங்டனுக்கு வந்து இந்த கலவரத்தில் ஈடுபட்டுள்ளார்.  இவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை மன்னிக்குமாறு டிரம்ப் தன்னை பதவி நீக்கம் செய்யும் முன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதையொட்டி ஜென்னா ரயான், “நாங்கள் எங்களது நாட்டுப்பற்றை காட்டவே இவ்வாறு செய்தோம்.  ஆனால் எனக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.  அது எனக்கு தேவையற்ற தண்டனை என நான் கருதுகிறேன்.  எனவே நான் என்னையும் மன்னித்து விடுதலை செய்யுமாறு அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.  நான் எனது நாட்டின் அதிபர் சொன்னதை மட்டுமே செய்துள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.