மலேசியா : ஈப்போ நகர முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா

Must read

ப்போ

லேசியாவில் ஈப்போ நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிக அளவில் முதியோருக்கு ஏற்படுவது யாவரும் அறிந்த ஒன்றாகும்.   இதையொட்டி முதியோர்கள் மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு வருகின்றனர்.   அது மட்டுமின்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதியோர்களுக்கு ஏற்கனவே உள்ள பாதிப்புகளின் விளைவுகளும் அதிகரித்து பலர் உயிர் இழந்துள்ளனர்.

மலேசியாவில் ஈப்போ நகரில் ஆனிங் முதியோர் இல்லம் என்னும் பெயரில் ஒரு முதியோர் இல்லம் அமைந்துள்ளது.   இங்கு 36 முதியோரும் 24 ஊழியர்களும் உள்ளனர். இந்த முதியோர் இல்லத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா சோதனை நடந்தது.  அப்போது அங்குள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்தது.

கடந்த 14 ஆம் தேதி அன்று இங்கு மீண்டும் கொரோனா சோதனை நடந்துள்ளது.  அப்போது இங்கு 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இதில் 7 பேர் முதியோர் மற்றும் 6 பேர் ஊழியர்கள் ஆவார்கள்.  இந்த முதியோர் இல்லம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டோர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த இல்லம் அடைக்கப்பட்டுள்ளது.

இந்த முதியோர் இல்லம் முழுக்க முழுக்க நன்கொடையாளர்கள் மூலமே நடந்து வருகிறது.  தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் நன்கொடைகள் குறைந்துள்ளன.  நேரில் வந்து நன்கொடை அளிப்போரின் மூலம் மட்டுமே இல்லம் நடந்து வருகிறது.  இந்நிலையில் முதியோர் இல்லம் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதால் மேலும் நிதி நெருக்கடி ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

More articles

Latest article