பாட்னா:
பீகார் முதல்வராக லாலுபிரசாத் யாதவ் பதவி வகித்தபோது நடைபெற்ற மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கில் ராஞ்சி கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
ஏற்கனவே 3 வழக்குகளில் லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 4வது வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
பீகார் முதல்வராக 1995-96 ம் ஆண்டுகளில் லாலுபிரசாத் இருந்த போது தும்ஹா கரூவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கில், லுாலு, ஜெகந்நாத் மிஸ்ரா உள்பட 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நாட்டை உலுக்கிய இந்த மாட்டு தீவன ஊழல் வழக்குகளில் ஏற்கனவே 3 வழக்கில் லாலுவுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 4- வது வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
தற்போது, ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் லாலு, இன்று 4வது வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை தொடர்ந்து நீதிமன்றம் அழைத்து வரப்படுகிறார்.