கனமழை எதிரொலி: திருப்பதி-திருமலை சாலையில் போக்குவரத்து முடக்கம்

Must read

அமராவதி: 
னமழை எதிரொலியாகத் திருப்பதி-திருமலை சாலை போக்குவரத்து முடக்கப் பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகக் கொட்டித்தீர்க்கும் கனமழையால் திருப்பதி நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்த கனமழை காரணமாகத் திருப்பதி மலைக்குப் பாத யாத்திரையாகச் செல்ல பயன்படுத்தப்படும் மலைப் பாதை நேற்று மூடப்பட்டது. சாலை போக்குவரத்து மட்டும் இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் திருப்பதி – திருமலை இடையேயான சாலை போக்குவரத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
சில இடங்களில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் மழை வெள்ளத்தால் அப்படியே அடித்துச் செல்லப்படும் வீடியோகள் சமூக இணைய வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More articles

Latest article