சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் ஷாருக்கான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இதனால் ரசிகர்களிடையே டைகர் 3 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் மலேகான் நகரில் உள்ள மோகன் திரையரங்கில் நேற்று படம் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்து ரகளையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சம்பவத்தை கண்டித்துள்ள சல்மான் கான், “டைகர் 3 திரையிடப்பட்ட தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்ததாக கேள்விப்பட்டேன். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இது மிகவும் ஆபத்தானது இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திரையரங்க நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

டைகர் 3 : சல்மான் கான் நடித்த படம் வெளியான தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து அலப்பறையில் ஈடுபட்ட ஷாருக்கான் ரசிகர்கள்