பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஆர் சுந்தர்ராஜனை அவரது மகன் அசோக் சுந்தரராஜன் கலாய்த்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

1982 ம் ஆண்டு மோகன் நடிப்பில் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஓடி சாதனை படைத்த பயணங்கள் முடிவதில்லை படத்தில் துவங்கி பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆர். சுந்தர்ராஜன்.

வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய இவர் 2000 ஆண்டு வரை தொடர்ச்சியாக படங்களை இயக்கி வந்தார்.

இதுவரை 25 படங்களை இயக்கியுள்ள இவர் நடிப்பிலும் ஈடுபாடு காட்டி வந்தார் அப்படி இவர் 1995 ம் ஆண்டு வெளியான பிரபு, சங்கீதா நடித்த சீமந்தம் படத்தை இயக்கி நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் போவோர் வருவோரிடம் வீணாக வம்பிழுக்கும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆர். சுந்தர்ராஜன்.

இந்த காமெடியை தற்போது அவரிடமே அவரது மகன் அசோக் சுந்தர்ராஜன் செய்துள்ளது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.