ராகவா லாரன்ஸ், எஸ். ஜெ. சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ஜிகர்தண்டா XX.

திரையரங்குகளில் அதிரடி காட்டி வரும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதோடு அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படம் குறிஞ்சி மலர் போல் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் ஒரு அற்புதமான படைப்பு என்று இதன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜூக்கு எழுதியுள்ள கடிதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளதாவது :

“ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள்.

‘லாரன்ஸால்’ இப்படியும் நடிக்க முடியுமா.? என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது: எஸ். ஜெ. சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லதனம், நகைச்சுவை, குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்.

திருவோட கேமிரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டிற்குரியது. ‘திலீப் சுப்ராயனின் சண்டை காட்சிகள் அபாரம். ‘சந்தோஷ் நாராயணன்’ வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

இந்த படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள் நடிகர்களுடன் போட்டி போட்டு கொண்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்து இருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும், அற்புதம்.

இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார். பிரமிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார். அழவும் வைக்கிறார். 1 am proud of you கார்த்திக் சுப்புராஜ், My hearty congratulations to கார்த்திக் சுப்புராஜ் And Team” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.