வரலட்சுமி படப்பிடிப்பில் தீ விபத்து….!

Must read

வி.சமுத்ரா இயக்கும் ‘ரணம்’ என்கிற கன்னடப் படத்தில் சிபிஐ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வரலட்சுமி. இப்படத்தில் ஹீரோவாக சிரஞ்சீவி சர்ஜூன் நடிக்கிறார்.

இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பெங்களூருக்கு அருகிலுள்ள பாகலூரில் படமாக்கப்பட்டது. அக்காட்சியில் இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்ற காட்சி. அப்பொழுது அருகில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

அங்கே வேடிக்கை பார்க்க வந்த ஐந்து வயது சிறுமியும் அவரது அம்மாவும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

More articles

Latest article