பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றலான கோவை எஸ்பி பாண்டியராஜன்

Must read

கோவை:

ர்ச்சைக்குரிய வகையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் பெயரை வெளிப்படுத் திய கோவை எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுகாத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை தொடக்கத்தில் விசாரித்த கோவை மாவட்ட எஸ்.பி., பாண்டியராஜன், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன்,  மற்றும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் நடேசன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை இடமாற்றம் செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வற்புறுத்தியதை தொடர்ந்து, அவர்கள் 3 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 3 பேருக்கும் வேறு பணி வழங்கப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட புதிய எஸ்பியாக சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி டிஎஸ்பியாக சிவக்குமார், பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளராக வெங்கட்ராமன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

More articles

Latest article