சென்னை: இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க தேவையான நிதியுதவி வழங்கப்படும் என்றும்  இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு செய்யப்படும் என்றும் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டப்பேரவையில் அமைச்சர் தாக்கல் செய்து காகிதமில்லா பட்ஜெட்டில்,  உழவுத் தொழிலே உன்னதம் என உணர்த்தும் வகையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக கூறியவர்,  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக பிரித்துள்ளனர் நம் ஆதித் தமிழர்கள் / வேளாண்மை உச்சநிலைக்குச் செல்ல இந்த வேளாண் பட்ஜெட் உதவும் என்று கூறினார்.

தமிழ்நாட்டில், இதுவரை இல்லாத வகையில், குறுவை சாகுபடி 4 லட்சம் 96 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடைபெற்றது நெல் சாகுபடி மொத்த அளவு 53.56 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 3.35 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.154 கோடி இடுபொருள் மானியம் வழங்கப்பட்டுள்ளது

டெல்டாவில் 3.16 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், 59 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது

சிறு தானியங்கள், எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

தமிழ்நாட்டில் யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை

தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் 29 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று கூறிய அமைச்சர்  அவ்வாறு பாதிக்கப்படு மாவட்டங்களில்   மாற்றத்தைத் தாங்கி வளரும் பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்  என்றார்.

இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க தேவையான நிதியுதவி அளிக்கப்படும். அதன்படி, முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்து வேளாண் தொழில் தொடங்க உதவி செய்யப்படும். வேளாண் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் வீதம் நிதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக 200 வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கிராமங்களில் இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

ரூ.  132 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முதலமைச்சரின் நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், மானாவாரி நிலத்தொகுப்பு

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.400 கோடி வழங்கப்படும என்றும், இயற்கை உரங்கள் தயாரிக்க குழுக்கள் அமைப்பு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கை விவசாயத்திற்கான இயற்கை உரங்கள் தயாரிக்க 100 குழுக்கள் உருவாக்கப்படும் என்றும், இயற்கை உரங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு குழுவிற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றார். மேலும்,   மண்புழு உள்ளிட்ட இயற்கை உரங்களை தயாரிக்க குழுக்கள் அமைப்பு – தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும்.

தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.2,339 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அறுவடைக்கு பின் நடைபெறும் நெல் சாகுபடிக்கு ரூ.5 கோடி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரூ.  15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் கருவிகள் தொகுப்பு வழங்கப்படும் என்றார்.

தமிழ்நாட்டில் மரம் வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்,  சந்தனம், தேக்கு உள்ளிட்ட உயர்ரக மரங்கன்றுகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.