சென்னை: சேலத்தில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் – வேளாண்மைக்கான பிரத்யேக செயலி மற்றும் இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என்று  வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வேளாண்துறை அமைச்சர் இன்று தாக்கல் செய்துவரும் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில்,  சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மைக்கான பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் இணையதளம் உருவாக்கப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வேளாண்துறையில், விதை முதல் உற்பத்தி வரை, அனைத்தையும் ஒருங்கே அறிந்துகொள்ளும் வகையில் பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தடும் என்று கூறிய அமைச்சர், “தமிழ் மண் வளம்” என்ற புதிய இணையதளம் உருவாக்கப்படும் என்றும் கூறிய அமைச்ச்ர,  தமிழக விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள மண்ணின் வளம், தன்மை குறித்து அறிந்து கொள்ள புதிய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும்,   கோவை வேளாண் பல்கலை.யுடன் இணைந்து “தமிழ் மண் வளம்” என்ற புதிய இணைய முகப்பு உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

செல்போன்கள் மூலம் மோட்டார்களை இயக்கும் நுட்பத்தை விவசாயிகள் பெறும் வகையில் ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும்,  பம்புசெட்டுகளை தொலைவில் இருந்த இயக்க உதவிடும் கருவிகளுக்கு ரூ.5 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  வேளாண் ஒழுங்குமுறை விரிவாக்க மையங்களில், கிரெடிட் கார்டுகள் மூலம், பணப்பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

தஞ்சை, சேலம், திருவள்ளூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் சோயா சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இயற்கை முறை பருத்தி சாகுபடி ஊக்குவிக்கப்படும்

சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், சூரியகாந்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும். இதற்காக ரூ.28 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் முறை, விவசாயிகள் அனைவரும் அறியும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.195 வழங்கப்படும்

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் ரூ.71 கோடியில் செயல்படுத்தப்படும்.

சென்னை, திருச்சியில் எஞ்சிய நச்சு பகுப்பாய்வு மையம் அமைக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 38 கிராமங்களில் ரூ.95 கோடி செலவில் மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் மையம் அமைக்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையானது டன்னுக்கு ரூ.195 உயர்த்தித் தரப்படும்.

சர்க்கரை ஆலை நவீனமயமாக்கல் ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வேளாண் துறைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.