சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்தள் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் உரையாற்றினார். அந்தஉரையில், ‘‘கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது.இந்த போக்கை மாற்றி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும். சிலஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும் மனிதவளத்தின் பலன்களை முழுமையாக பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய முற்படுவோம். இந்தவளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதையை வகுத்து, அரசுக்குஆலோசனை வழங்க, ‘முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்றை அமைக்க அரசுமுடிவெடுத்துள்ளது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ்வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின்முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ், முன்னாள் மத்திய நிதித் துறை செயலர் எஸ்.நாராயண்ஆகிய பொருளாதார அறிஞர்கள்இக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,   ‘குழுவுக்கான செயலகமாக தமிழக அரசின் நிதித் துறைசெயல்படும். குழு ஒருங்கிணைப்பாளராக நிதித் துறை செயலர்ச.கிருஷ்ணன் செயல்படுவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.