சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாகன சோதனையின்போது விவசாயி ஒருவரை காவலர் சரமாரியாக தாக்கியதில், தலையில் படுகாயமடைந்த வியாபாரி சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். அந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தாக்குதல் நடத்திய எஸ்எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் தாக்கும் காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள இடையபட்டி- வாழப்பாடி சாலையில், மளிகை மற்றும் பழக்கடைகள் நடத்தி வருபவர் முருகேன். இவர்  இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். குடிப்பழக்கம் உடைய முருகேசன், நேற்று தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கல்வராயன்மலை  பகுதிக்கு சென்று மது அருந்தி விட்டு  திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை,  கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், முருகேசன் மற்றும் இவரது நண்பர்களை நிறுத்தி விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால் ஆத்திரமடைந்த ஏத்தாப்பூர் போலீஸார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி லத்தியால் சரமாரியாக முருகேசனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது, சிறப்பு காவல் உதவி ஆய்வாளருடன் இரண்டு போலீஸார் உடனிருந்ததாக கூறங்பபடுகிறது. காவலிர் தாக்குதலில், இதில் கீழே விழுந்த  முருகேசனின் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மயங்கிய நிலையில் கிடந்த அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அருகே உள்ள  தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு முதலுதவி வழக்கப்பட்டு,  மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு  அவரது உடல்நிலை மோசமடைந்து வந்தது.இதையடுத்து இன்று அதிகாலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அப்போது வழியிலேயே முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது சொந்த ஊர் மக்கள் கொதித்தெழுந்தனர்.

இதுகுறித்து உறவினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில்  திரண்டுள்ளனர். முருகேசனுடன் இருசக்கர வாகனத்தில் சிவன் பாபு , ஜெயசங்கர், உடன் வந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வியாபாரி முருகேசன் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த முருகேசன் மனைவி அன்னக்கிளி (35), ஜெயப்பிரியா (18) ஜெயப்பிருந்தா (17) என்ற இரண்டு மகள், கவிப்பிரிய (13) ஒரு மகன் உள்ளனர்.

சேலம் வியாபாரி தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.