சென்னை: ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு, சென்னையில் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாளாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1,316 ஆக இருந்த  பாதிப்பு, தற்போது ( இன்று) 3,351 ஆக அதிகரித்துள்ளது. இரு நாளில் இருமடங்காக உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மீண்டும் சென்னையில் பாதிப்புகள் உயரத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்த நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. கடந்த வாரம் முதலாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களுக்கு சில தளர்வுகளும், அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது.

மிழகத்தில் நேற்று  6,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 410  பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  24,36,819 பேராக உயர்ந்துள்ளது.,இதுவரை 31,580 பேர் உயிர் இழந்துள்ளனர். அதேவேளையில் தொற்றின் பாதிப்பில் இருந்து இதுவரை 23,48,353  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையில் நேற்று 410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் உயிர் இழந்துள்ளார். சென்னையில் இதுவரை சென்னையில் 5,30,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  8,095 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  5,18,588 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 3,351 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1,316 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று 3,351 ஆக அதிகரித்துள்ளதாகவும், பாதிப்பு சதவீதம் 0.2%ல் இருந்து 0.6% ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 2.49 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

22.06.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 23,78,882 பேருக்கும், 22.06.2021 அன்று 15,981 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக பாதிப்பு: