வெளியே செல்லும்போது மக்கள் முககவசம் அணிய தேவையில்லை! இத்தாலி அரசு அறிவிப்பு

Must read

த்தாலியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், வரும் 28ந்தேதி முதல் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்து உள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தொற்றின் 2வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பரவலை தடுப்பதில் தடுப்பூசி சிறப்பாக பணியாற்றுவதால், உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இத்தாலி நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளையிலர, கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், அங்கு வருகிற 28ந்தேதி முதல்  பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு உள்ள வடமேற்கில் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு தவிர அனைத்து இத்தாலிய பகுதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அரசின் இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

More articles

Latest article