விசாரணை கமிஷனிடம் ஜெ., சிகிச்சை ஆவணங்கள் தாக்கல்…அப்பல்லோ தகவல்

சென்னை:

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக 30 தொகுப்புகள் கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கை நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறப்பு வரை அனைத்து ஆவணங்களையும் அப்பல்லோ நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.

இதில் 30 தொகுப்புகள் அடங்கியிருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

Tags: Filing of jayalalitha treatment documents to the Commission says appollo, சிகிச்சை ஆவணங்கள் தாக்கல்...அப்பல்லோ தகவல், விசாரணை கமிஷனிடம் ஜெ.