லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

மாநகரம் தொடங்கி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதனிடையே உதவி இயக்குனர்கள் மற்றும் சினிமா ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் ‘ஜி ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை சில தினங்களுக்கு முன்பு தொடங்கினார்.

முதற்கட்டமாக தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்களின் படங்களை தயாரிக்க உள்ள லோகேஷ் கனகராஜ் தனது நண்பரும் நடிகரும் இயக்குனருமான உறியடி விஜயகுமார் நடிக்க உள்ள படத்தை தயாரிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு ‘ஃபைட் கிளப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது விஜயகுமார் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை அப்பாஸ் ரஹ்மத் இயக்குகிறார்.

லோகேஷ் கனகராஜ் புதிதாக துவங்கியுள்ள பட தயாரிப்பு நிறுவனம் ‘ஜி ஸ்குவாட்’