அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொண்டு அரசு அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய  பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி

Must read

சேலம்: 
ரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொண்டு அரசு அதிகாரிகளை ஆச்சரியத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி தர்மலாஸ்ரீ ஆழ்த்தியுள்ளார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பேளூர் கரடிப்பட்டியை சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்ட உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கியுள்ள அவர், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் தாமரைக் கண்ணனை இவர் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்,  மகப்பேறு விடுப்பில் சொந்த ஊரான சேலத்திற்கு வந்துள்ளார்.
நேற்றிரவு சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அவருக்குப்  பெண் குழந்தை பிறந்தது.
அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி தர்மலாஸ்ரீ-க்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

More articles

Latest article