சென்னை: தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ந்தேதி வெளியாகும் என பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த தேர்வானது மாநிலம் முழுவதும் கடந்த மார்ச் 11 முதல் நடைபெற்றது. இத்தேர்வினை சுமார் 9 லட்சம் பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்களும் எழுதி உள்ளனர். அதாவது, 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் என மொத்தம் சுமார் 9 லட்சம் பேர் எழுதியுள்ளனர் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என பெற்றோர்கள், மாணவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து மே 10ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்களது பதிவு எண் (Roll Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு, கீழே உள்ள அரசு அதிகாரப்பூர்வ இணையதளங்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in வாயிலாக முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்:
மேலும், இணையதளம் மட்டுமின்றி, மாணவர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறிய இந்த ஆண்டும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள் 78452 52525 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் மூலமாகவும் தங்களது முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
முன்னதாக, நடப்பு கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு (+2) பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ம் தேதி வெற்றிகரமாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போது 10-ம் வகுப்பு முடிவுகளும் வெளியாக உள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
[youtube-feed feed=1]