சென்னை: தேர்தல் பிரசார காலக்கட்டட்ததில் தவெக பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசிய திமுக ஆதரவாளரும், மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகருமான பொன்ராஜ் மீது 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது 2026ம் ஆண்டு மார்ச் மாதம் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய திமுக ஆதரவாளரான பொன்ராஙஜ., தவெக பெண் நிர்வாகிகள், ரசிகைகளை அவதூறாக பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அவர் மன்னிப்பு கோர முடியாது என்று கூறிய நிலையில், அவர் மீது கடலூர் எஸ்.பி அலுவலகம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் தவெகவினர் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடலூர் புதுநகர் காவல் நிலைய போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் சைபர் குற்றப்பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பொன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த புகாரின் பேரில் பொன்ராஜிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
பெண்கள் விபச்சாரிகள் என விமர்சனம்: டிஜிபி அலுவலகத்தில் பொன்ராஜ் மீது தவெக தலைவர் நேரடி புகார்…
[youtube-feed feed=1]