ராமண்மா வியூஸ்::
ramana
சற்று முன், வாட்ஸ்அப்பில் நண்பர் கலாநிதி ஒரு வீடியோ அனுப்பி இருந்தார்.  பேச்சாளர்  பாரதி பாஸ்கரின் உரைவீச்சு.  அப்பாக்கள் பற்றிய மகன்களின் எண்ண ஓட்டம்.  ஏற்கெனவே படித்ததுதான்.  ஆனாலும் பாரதி பாஸ்கரின் ற்ற இறக்கமான குரலில்  கேட்கும்பது  மிக அருமையாகவும், நெகிழ்வாகவும் இருக்கிறது.
பாரதிபாஸ்கர்  சொல்வது இதுதான்:
“ 5 வயதில் அப்பாவை, “சூப்பர் அப்பா” என்பான் மகன்.
10 வயதில்,  “நல்லவரு… ஆனா அப்பப் கத்துவாரு!”
15  வயது: “அம்மா..உன் வீட்டுக்காரர்கிட்ட சொலலிடுமா அப்பபப் என் ரூட்ல வர்றாரு மரியாதையே இல்ல!”
20 வயது: “ எப்படிம்மா இந்த ஆளைப்போய் கல்யாணம் பண்ணிகிட்ட?”
30 வயது: “சார்.. நான் என் அப்பாகிட்ட  நான் பேசறதே இல்ல சார்!”
40 வயது: “எங்க அப்பா கத்திக்கிட்டேதான் இருப்பாரு.. ஆனா பாவம்,, நல்லவரு!”
50  வயது: “அந்த வறுமையிலும் எங்க அப்பா எங்களை எப்படி வளர்த்தாரு தெரியுமா.. அவர் கிரேட்..”

  • இப்படி முடிகிறது பாரதி பாஸ்கரின் பேச்சு. இன்னொரு உண்மையையும் அவர் சொல்லியிருக்கலாம்.

“அப்பா ஈஸ் கிரேட்” என்று மகன்கள் உணரும்போது… ஆகப்பெரும்பானமையான அப்பாக்கள் உயிரோடு இருப்பதில்லை..
வீடியோ:
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/09/VID-20160901-WA0027.mp4[/KGVID]