‘ஈரம்’  படத்தை இயக்கிய அறிவழகன் எழுதி இயக்கும் ‘குற்றம் 23’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு இணைந்து ரெதான் – தி சினிமா பீப்பல் நிறுவனம் தயாரிக்கிறது.

குற்றம் 23.. அருண் விஜய்
குற்றம் 23.. அருண் விஜய்

சமீபத்தில் போதையல் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி கைது செய்யப்பட்ட அருண் விஜய், இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவரது  ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.  பிரபல கதாசிரியர் ராஜேஷ்குமார் எழுதிய நாவல் ஒன்றைத் தழுவி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
“மெடிக்கல் க்ரைம் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம், தமிழில் புது முயற்சி” என்கிறார் இயக்குர் அறிவழகன்.
குற்றம் 23 படத்தின் டிரெய்லர்: