அப்பா சில படங்களில் கொஞ்சம் ஓவர் தான்!:  ஐஸ்வர்யா ரஜினி

Must read


ரஜினிகாந்த் மகள், ஐஸ்வர்யா தனது வாழ்வில் தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை, புத்தகமாக எழுதியுள்ளார். ‘ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ்’ எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள அந்த புத்தகத்தை ரஜினிகாந்தின் பிறந்தநாள் (டிசம்பர் 12) அன்று வெளியிட்டார்.
உலகப் புகழ்பெற்ற ‘ஹார்ப்பர்காலின்ஸ்’ பதிப்பகத்தின் இந்தியப் பிரிவு இந்த புத்தகத்தை வாங்கி வெளியிட்டுள்ளது
மும்பையில் நடைபெற்ற இப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா, தனது தந்தை ரஜினி பற்றி சில சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டார்.
“என் அப்பா ( ரஜினி) நடிக்கும் படங்களை முதலில் விமர்சனம் செய்வது நான் தான். படத்தில் அதீத பில்ட் அப்… கொஞ்சம் ஓவராக இருந்தால் – அதை இயல்பாக வெளிப்டுத்திவிடுவேன்” என்றார் ஐஸ்வர்யா.

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்டாரின் மகளாக இருப்பதின் நன்மை, தீமை, சகிக்க முடியாத விஷயங்களை தனது புத்தகத்தில் எழுதியுள்ள ஐஸ்வர்யா இந்த புத்தகத்தை என்னை போன்று உள்ள உலக ஸ்டார்களின் குழந்தைகளுக்காக சமர்ப்பிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தனது கணவரான நடிகர் தனுஷ் மற்றும் தந்தை ரஜினிக்கும் இடையே நிலவும் உறவு குறித்தும் விழாவில் பேசினார்: “தனிப்பட்ட முறையிலும்
, தொழில்முறையிலும் இருவரும் ஒருவரையொருவர் புகழ்வதுண்டு. கணவர் தனுஷ் சிறுவயதிலிருந்தே சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பதால், அப்பாவின் ஒவ்வொரு செயலையும் தனுஷ் ரசிப்பார். அதேபோல, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என்ற போர்வையில் இல்லாமல் சுயமாக தனுஷ் தனது திறமையால் உயர்ந்ததைக் கண்டு அப்பாவும் நெகிழ்வார்”  என்றார்.
 
 
 

More articles

Latest article