இயக்குநர் கமல்

சென்ற மாதம் சுப்ரீம் கோர்ட் திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் நாடெங்கும் ஆதரவும் அதே சமயம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது, இதனிடையில் கேரளாவை சேர்ந்த இயக்குநர் கமல் தேசிய கீதத்தை அவமதித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
அதாவது கேரளாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படங்கள் திரையிடும் போது சில இளைஞர்கள் தேசியகீதத்துக்கு எழுந்து நிர்க்காமல் அவ‌மரியாதை செய்துள்ளார்கள் இந்த தகவல் அறிந்த போலீசார் அந்த 6 இளைஞர்களையும் கைது செய்துள்ளார்கள்.
இந்த நடவடிக்கைக்கு அந்த விழாவின் சேர்மனான இயக்குநர் கமல் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது :-
அந்த இளைஞர்கள் செய்தது தவறு தான் ஆனால் அதற்கு அவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? நான் தேசிய கீதத்தை மிகவும் மதிப்பவன் நான் அந்த விழாவின் சேர்மேன் என்னிடம் கூட அனுமதி கேக்காமல் காவலர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள், சொல்லப்போனால் தெருவில் நின்று தேசிய கீதம் பாடி அதற்கு அவமரியாதை செய்தது இவர்கள் தான். என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார் கமல்.