நடிகை ரெஜினா

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையான ரெஜினாவிடம் பிரபல‌ இயக்குநர் கிருஷ்ண வம்சி மன்னிப்பு கேட்டுள்ளார். அதாவது நடிகை ரெஜினாவின் பிறந்த நாள் இரண்டு நாட்களுக்கு முன் வந்துள்ளது தனது பிறந்த நாளிலும் படபிடிப்பில் கலந்து கொண்ட அவருக்காக ஒரு பூங்கொத்து கூட கொடுக்கவில்லையாம் படக்குழு.
அந்த நாளில் ரெஜினாவின் ரசிகர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்தார்கள் படபிடிப்பு முடிந்த பின் இயக்குநருக்கு இந்த விஷயம் தெரியவர உடனடியாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார் கிருஷ்ண வம்சி. .
ரெஜினாவின் பிறந்த நாளை கொண்டாடாமல் விட்டதால் அதற்கு பதிலாக அவர் நடிக்கும் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு அவரை சமாதானம் செய்துள்ளார்களாம். நடிகை ரெஜினா நக்ஷத்ரம் என்ற படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.