மாமல்லபுரம்: இருசக்கர வாகனத்தில் தண்ணீர் கேன் வாங்க சென்ற தந்தை மகன்,  அறுந்து தொங்கிய மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்  மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன் (வயது 42). இவர் சம்பவத்திதன்று தனது 6ம் வகுப்பு படித்து வரும் பையன் ஹேமநாதனுடன், தண்ணீர் கேன் வாங்குவதற்காக அருகே உள்ள மெயின் பஜாருக்சக  தங்களது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது,  வயல்வெளியில், சென்றுகொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பி ஒன்று, அறுந்து விழுந்துள்ளது. இதை அறியாமல் அந்த பகுதியில் சென்ற கோதண்டனின் வாகனத்தில், அந்த உயர்அழுத்த மின்கம்பி உரசி உள்ளது. இதனால், மின்சாரம் பாய்ந்து, தந்தை மகன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடடினயாக, மின்வாரிய அலுவலகத்துக்கும், காவல்துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து,  உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின் கம்பியில் சிக்கியிருந்த இருவரது உடலும் மீட்கப்பட்டது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.