இருபதாவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! கண்டுகொள்ளாத மத்திய அரசு!

 

டில்லி :

தலைநகர் டில்லியில் தமிழகத்துக்கு போதிய அளவு வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும். விவசாயிகளின் கடன்தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜந்தர் மந்தரில் நடைப்பெற்று வரும் இந்த போராட்டம்  தமிழக நதிநீர் இணைப்பு விவசாயிகள் நல சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான விவசாயிகள் , பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

20 ஆவது நாளாக நடைபெற்றுவரும் இப்போராட்டத்துக்கு பிற மாநில விவசாயிகளும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர்களில் சிலர் விவசாயிகளை சந்தித்தனர் என்றாலும், அவர்களது கோரிக்கை மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பது வேதனை தரக்கூடியதாக உள்ளது.


English Summary
Farmers protest continuing in twentieth day! The federal government ignored!