தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குபதிவு துவங்கியது!

சென்னை:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவஙகியது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர்,பொருளாளர் என 27 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது

இந்தத் தேர்தலில், விஷால்,ஆர்.ராதாகிருஷ்ணன்,கேயார் ஆகியோர் தலைமையில் மூன்று அணிகள்  போட்டியிடுகின்றன. ’நம்ம அணி’ என்ற பெயரில் போட்டியிடும் விஷால் அணியில், நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குநர்கள் பாண்டிராஜ், மிஷ்கின், ஞானவேல்ராஜ் ஆகியோர் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்தனர்.

அண்ணாநகர் கந்தசாமி பெண்கள் கல்லூரியில் காலை எட்டு மணிக்கு வாக்குப்பதிப்பதிவு துவங்கியது. வாக்காளர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகர்கள் களமிறங்கியிருப்பதால் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 


English Summary
polling-starts-in-tamil-nadu-film-producers-council-election