ஐபிஎல் 2023 டி 20 கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த மாதம் 31 ம் தேதி துவங்குகிறது.

சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன் அணிகளுக்கு இடையிலான இந்த முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

சென்னையில் மொத்தம் 7 போட்டிகள் நடைபெறுகிறது இதில் முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஏப்ரல் 3 ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான டிக்கெட் இன்று முதல் ஆன்லைன் மற்றும் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்டரில் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ. 1500 முதல் 3000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இன்று காலை 9:30 மணி முதல் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்டர்களில் டிக்கெட் விற்பனை துவங்க இருக்கும் நிலையில் நள்ளிரவு முதலே ரசிகர்கள் குவியத்துவங்கி உள்ளனர்.