ஐபிஎல் 2023 டி 20 கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த மாதம் 31 ம் தேதி துவங்குகிறது.

சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன் அணிகளுக்கு இடையிலான இந்த முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் அடுத்த போட்டி சென்னையில் ஏப்ரல் 3 ம் தேதி நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே அணியின் இந்த முதல் போட்டிக்கான டிக்கெட் மார்ச் 27 ம் தேதி விற்பனை செய்யப்படுகிறது.

காயம் காரணமாக சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரி முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.