வாஷிங்டன்

ற்கொலைக்கு முயன்ற பிரபல பாப் பாடகி கோகோ லீ சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கில் பிறந்த கோக்கோ லீ அமரிக்காவிற்க்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்தார்.  அவர் அங்கு உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்த பின் ஹாங்காங்கிற்குச் சென்றபோது, ஒரு பாடும் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். அவரது இசை வாழ்க்கை இதன் மூலம் தொடங்கியது.

அவர் 1990கள் முழுவதும் ஆசியாவில் பெரும் வெற்றி கண்டார்.  கோகோலீ சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டு இதன் மூலம் ஆஸ்கார் விருது வரை சென்றுள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலைக்கு முற்சித்தார். அவர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். தற்போது அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இசை ரசிகர்களை அவர் மறைவு பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.