சென்னை,

‘தமிழக தாவுத் இப்ராஹிம்’  என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு உலகம் முழுதும் அண்டர் வேர்ல்ட் லிங்க் வைத்திருந்தவர்  காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர்.

. கொலை, கொள்ளை உட்பட பல்வேறு குற்றவழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வெளிநாடு தம்பி சென்ற அங்கிருந்தபடியே தமிழகத்தில் பல குற்றச் செயல்களை நடத்தி வந்தவர்.  நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்தியாவை விட்டு தப்பியோடிய ஸ்ரீதர், துபாயில் வசித்துவந்தார். பிறகு கம்போடியா நாட்டிற்கு சென்றார். அங்கு அவர், தற்கொலை செய்துகொண்டதாக தமிழக காவல்துறை  அறிவித்தது ஆச்சரியதை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் தனபால் கம்போடியாவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொடக்கத்தில் காஞ்சிபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த சக்கர வர்த்தி என்பவரிடம் வேலைக்கு சேர்ந்து பின்னர், அவருடனேயே பிசினஸ் பார்ட்னராக ஸ்ரீதர் உயர்ந்துள்ளார்.

இதன் காரணமாக சக்கரவர்த்தியின் மகளையே திருமணமும் செய்துகொண்டான். அதைத் தொடர்ந்து அவரது கள்ளச்சாராய தொழில் பக்கத்து மாவட்டங்களுக்கும் விரிவடைந்தது.

அதையடுத்து ரியல் எஸ்டேட் தொழிலில் கால் பதித்த ஸ்ரீதர், இடங்களை வாங்க பலரை மிரட்டிய அடிபணிய வைத்து அடிமாட்டு விலைக்கு வாங்கி பணங்களை குவித்து வைந்தார்.

இவர்மீது ஏராளமான கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், மிரட்டல் போன்ற நூற்றுக்கணக்கான வழக்குகள் காஞ்சிபுரத்திலும், மற்ற மாவட்ட காவல்நிலையங்களிலும் நிலுவையில்உள்ளது.

இதற்கிடையில் அவருடன் இணைந்து ரியல் எஸ்டேட் செய்து வந்த போலீஸ் அதிகாரியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அவருக்கு தொழிலில் உதவிய காவல்துறை எதிரியாக மாறியது.

இதன் காரணமாக அவரது தொழில் நசிவடைந்தது. வழக்குகளும் நெருக்க ஆரம்பித்தன. இதனால், ஸ்ரீதர் தலைமறைவு வாழ்க்கை வாழ தொடங்கினார். முதலில் சிறிது காலம் இலங்கையில் தங்கி யிருந்தார். அப்போது சர்வதேச போதை பொருள் கும்பலுடன் அவருக்கு தொடர்பு  ஏற்பட்டது.

இதன்மூலம் மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள  போதைப் பொருள்களை விற்கும் கும்பல்களுடன் சேர்ந்து போதை மருந்து கடத்தல் தொழிலில் தீவிரமாக இறங்கி, கோடிகளை குவித்தான்.

இதன் காரணமாக ஸ்ரீதரை இண்டர்போல் போலீசாரும் தேடத் தொடங்கினர். இதற்கிடையில், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் துபாயில் தங்கி இருந்து தனது தொழிலை நடத்தி வந்தான்.

ஆனால், அவனது இரு குழந்தைகளும் லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த படித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் சுமார் 50 கோடி மதிப்புள்ள நிலம் ஒன்றின்   உரிமையாளரை மிரட்டி,  மற்றொருவருக்கு அந்த நிலத்தை விற்பனை செய்தான். இதற்காக அந்த நிலத்தின் உரிமையா ளரை இலங்கைக்கு அழைத்துச்சென்று மிரட்டியுள்ளான்.

இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததும், ஸ்ரீதரின் மீதான பிடி மேலும் இறுகியது. அவனது நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச போலீசால் கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு  இவரது மகன் சந்தோஷ் குமார் லண்டனில் இருந்து இலங்கை வழியாக சென்னை வந்தபோது அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த நிகழ்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.

அவரிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து,  துபாயில் ஸ்ரீதரின் மனைவி குமாரி செல்போன் கடை வைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில்தான் ஸ்டூடன்ஸ் விசா பெறப்பட்டதாகவும் , விசா நீட்டிப்பதற்காக விசாரணைக்கு ஆஜராகாமல் பிரிட்டன் தூதரகம் சென்றதாகவும் கூறியுள்ளார்.

இதையறிந்த ஸ்ரீதர், தான் சரணடைய தயார் என்று ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தினார். ஆனால் அதற்கு எந்தவித ரெஸ்பான்சும் இல்லாததால், இலங்கையில் இருந்து கம்போடியா சர்வதேச போதை கும்பலுடன் தொடர்புகொண்டு தமிழகத்தில் தன்மீதான பிரச்சினைகளை களைய உதவி கோரி உள்ளார்.

இதுகுறித்து பாலி தீவில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கைமாறாக, ரூ.70 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், முதல் கட்டமாக பல கோடி கைமாறியதாகவும் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த கும்பல் தமிழக உயர் அதிகாரிகள் மூலம் ஸ்ரீதர்மீதான வழக்குகளை நீர்த்துப்போக செய்து முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்தது.

ஆனால், ஒப்புக்கொண்டபடி ஸ்ரீதர் பணம் கொடுக்காததாலும், கம்போடியா போதை பொருள் கடத்தல் கும்பல் குறித்து தவறாக பேசியதாவும், கம்போடியாவில் போதை கடத்தல் கும்பலால் ஸ்ரீதர் தனபால் கொலை செய்யப்பட்டதாகவும் தகவ்லகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், ஸ்ரீதர் ஏற்கனவே கூறும்போது,  என் மீது சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் கிடையாது. அப்படி யாரேனும் ஆதாரம் இருப்பதாக நிரூபித்தால் அப்போதே சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொள்வேன்” என்று கூறியிருந்தாராம்.

இந்நிலையில் ஸ்ரீதர் தற்போது கொலை செய்யப்பட்டதாகவும் ஒரு சிலரும்,  அவர் தற்கொலைதான் செய்து கொண்டதாக சிலரும்  கூறி வருகிறார்கள்.