சென்னை: ரஜினியின் பாபா, பிதாமகன் உள்பட பல்வேறு திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் பிரபல தயாரிப்பாளருமான வி.ஏ.துரை கடந்த மார்ச் மாதம், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற பணம் இல்லை என்றும், சிகிச்சைக்கு உதவும்படி திரைப்பட துறையினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். பல பிரபலங்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் துரைக்கு  திரைப்பட தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடும் பாதிப்புக்குள்ளாகி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

திரைப்பட தயாரிப்பாளர்  வி.ஏ.துரை விருகம்பாக்கத்தில் வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று இரவு எதிர்பாராதவிதமாக காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வி.ஏ.துரை உயிரிழப்பு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இவரது மறைவுக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிகிச்சைக்காக உதவி கோருகிறார் ரஜினியின் பாபா, விக்ரமனின் பிதாமகன் படத் தயாரிப்பாளர் வி.ஏ.துரை…