கோட்டயம்

மலையாள திரையுலகின் பிரபல  நடிகரான வினோத் தாமஸ் நிறுத்தப்பட்ட காரினுள் பிணமாகக் கிடந்துள்ளார். 

வினோத் தாமாச் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகர் ஆவார். வினோத் தாமஸ் மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும், ஒருமுறை வந்து பார்த்தாயா, ஹப்பி வெட்டிங், ஜுன், நதொலி ஒரு செரிய மீனலா போன்ற திரைப்படங்களில் நடித்துப் பிரபலமடைந்தார்.

நேற்று இரவு 45 வயதான நடிகர் வினோத் தாமஸ் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.  நடிகர் வினோத் தாமஸ் கோட்டயம் மாவட்டம் பம்படி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலின் கார் பார்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் பிணமாக கிடந்துள்ளார்.

ஓட்டல் நிர்வாகம்  இது குறித்துக் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வினோத் தாமசின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.