சென்னை: பிரபல நாடக நடிகர் ‘அடேடே’ மனோகர் காலமானார். வயது முதிர்வு காரணமாக அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பழம்பெரும் நாடக, டிவி நடிகர் அடடே மனோகர். சின்னத்திரை மற்றும் நாடகங்களில் நடிகராக மட்டுமில்லாமல் கதாசிரியராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.  வயது முதிர்வு காரணமாக, தனது  சென்னை குமரன் சாவடி வீட்டில் ஓய்ஹவுஎடுத்து வந்த மனோகர்,  நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாடக நடிகரான அடடே மனோகர்  3500க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். எஸ்வி சேகர், கிரேசி மோகன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள அடடே மனோகர் போன்ற நடிகர்களுடன் அதிக அளவில்  நடித்துள்ளார்.  மேலும், ஏராளமான டிவி, ரேடியோ நாடகங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள அடடே மனோகர். சில நாடகங்களை அவரே எழுதி இயக்கியுள்ளார். சினிமாவிலும்  நடித்துள்ளார். சினிமாவில் 35 படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்துள்ளார். தன்னுடைய இயல்பான நடிப்பால் சின்னத்திரையிலும் பெரியத்திரையிலும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் அடடே மனோகர்.

சின்னத்திரையில் சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, பிளைட் 172, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெர்சஸ் ரமணி, பிரேமி, ரயில் சிநேகம், வண்ணக்கோலங்கள், உள்ளிட்ட 15 சீரியல்களில் இவர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார். மேடையிலேயே பாடி நடிப்பது இவரது தனிச்சிறப்பாக இருந்தது. அடடே மனோகர் என்ற பெயரில் டிடியில் கடந்த 1986 மற்றும் 1993ம் ஆண்டுகளில் நாடகம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

சினிமாவில் வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து அடடே மனோகர் நடித்துள்ளார். தற்போது இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் நேரிலும் சமூக வலைதளங்களிலும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  அடடே மனோகர் மறைவு குறித்து அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.