போலி நிறுவனங்களை நடத்திய சசிகலா! மத்திய அரசு தகவல்

டில்லி,

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலா பல்வேறு போலியான நிறுவனங்களை நடத்தி வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

அந்த நிறுவனங்களை முடக்கியும் உத்தரவிட்டுள்ளது.

நேற்று மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சகம்  நாட்டில் உள்ள போலி நிறுவனங்களின் இயக்குனர் பட்டியலை வெளியிட்டது.

இந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சான்டி,  சசிகலா உள்பட பலர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதைத்தொடர்ந்து செயல்படாத 2.09 லட்சம் நிறுவனங்களின் உரிமங்களை  அதிரடியாக ரத்து செய்தது.

இதனையடுத்து ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்களின் பெயர்களையும் வெளி யிட்டுள்ளது. இந்த பட்டியலில் சசிகலா, உம்மண்சாண்டி, ரமேஷ் சென்னிதாலா, தொழிலதிபர் யூசுப் அலி உள்பட பலர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களான  ஃபேன்சி ஸ்டீல்ஸ் பிரைவைட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவைட் லிமிடெட் , இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களும் சசிகலாவின் பெயரில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


English Summary
Fake companies run by Sasikala, central government information